• December
    06
    Friday

Main Area

Main



ஒரே மாதத்தில் 10 லட்சம் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களை விற்க சியோமி நிறுவனம் திட்டம்

redmi
redmi

பெய்ஜிங்: ஒரே மாதத்தில் சுமார் 10 லட்சம் எண்ணிக்கையிலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களை விற்க சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரெட்மி பை சியோமி என்ற புதிய சப் பிராண்டை சியோமி நிறுவனம் தொடங்கிய பின்பு அந்நிறுவனம் கீழ் முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 48 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை அமைந்துள்ளன. இந்நிலையில், ஒரே மாதத்தில் சுமார் 10 லட்சம் எண்ணிக்கையிலான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களை விற்க சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தேவையான அளவில் இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை ஸ்டாக் வைத்திருக்கிறீர்களா என்று வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அளித்த பதிலில் தான் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. ஒரு மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வது சியோமி நிறுவனத்தை பொறுத்தவரை பெரிய சாதனை இல்லை என்றாலும் சமீபகாலமாக சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சீன சந்தைகளில் இதுபோன்ற சாதனைகள் பலவற்றை அந்நிறுவனம் செய்திருந்தாலும் இம்முறை 1 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பதையே சியோமி நிறுவனம் குறிக்கோளாக வைத்துள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜிபி/4 ஜிபி/6 ஜிபி ரேம் வகைகள், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வகைகள், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம், 48 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 13 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், ஐ.ஆர் சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 4 அம்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.