ரெட்மி இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ரெட்மி இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: ரெட்மி இயர்பட்ஸ் எஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2-க்குப் பிறகு சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் எஸ் என்பது சந்தையில் உள்ள மற்ற நல்ல வயர்லெஸ் இயர்போன்களின் ஒப்பிடுகையில் விலை குறைவான சாதனம் ஆகும்.

தற்போதைக்கு கருப்பு நிறத்தில் மட்டும் இந்த இயர்பட்ஸ் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை இயர்பட்ஸ் உடன் இணைப்பதற்காக ப்ளூடூத் 5.0 அம்சம் இதில் இடம்பெற்றுள்ளது. ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடல் முதன்முறையாக மே 27 அன்று விற்பனைக்கு வெளியாகிறது. அதாவது நாளை மதியம் 12 மணிக்கு அமேசான் இந்தியா, எம்ஐ.காம், எம்.ஐ ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் எம்.ஐ ஸ்டுடியோ விற்பனை நிலையங்கள் மூலம் இந்த இயர்பட்ஸ் மாடலை வாங்க முடியும்.