• April
    04
    Saturday

Main Area

Main



ரூ.5999-க்கு ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பம்சங்களா?

ரெட்மி 8ஏ
ரெட்மி 8ஏ

மிகக்குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்கள் வருகிற 25ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

redmi 8a

இந்திய தொழில்நுட்ப சந்தையில் ரெட்மி நிறுவனம், மிகக்குறைந்த விலையில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரையிலான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து அனைத்து வித பயனாளர்களை கவர்ந்து வருகின்றது. 

அண்மையில் முப்பதாயிரம் ரூபாய்க்கு வெளிவந்த ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட் போன்கள், அதே விலை கொண்ட மற்ற ஸ்மார்ட் போன்களை விட நல்ல கற்பனை விற்பனையாகி வருகிறது. தற்போது வெறும் ரூ. 5999-க்கு அதீத சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது.

ரெட்மி 8ஏ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்போன்கள், இதற்கு முன் வெளிவந்த 7ஏ ஸ்மார்போன்களின் அப்டேடட் வெர்ஷன் ஆகும். அத்துடன் இன்னும் சில சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தை கவர இத்தகைய விலையில் இந்த ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக ரெட்மி நிறுவனம் குறிப்பிட்டது.

redmi 8a

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் டீஸர் அண்மையில் பிளிப்கார்ட் இயங்குதளத்தில் வெளிவந்தது. இதை வைத்து பார்க்கையில், சில ஸ்பேசிபிகேஷன்ஸ் கணிக்கப்பட்டுள்ளது. 

ரெட்மி 8ஏ சிறப்பம்சங்கள்:

1. 6.21 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் TFT டிஸ்ப்ளே.

2. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.

3. ஆக்டா-கோர் சிப்செட் மற்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. இன்-பில்ட் மெமரி.

4. 12 எம்.பி. பிரைமரி சென்சாரும், முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா.

ஆகிய வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகிற 25ஆம் தேதி முதல் முழுநேர விற்பனைக்கு வர இருக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.