• December
    12
    Thursday

Main Area

Mainநடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு?

actor vadivelu
actor vadivelu

சென்னை: இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிக்கும் ‘இம்சை அரசான் 24ம் புலிகேசி’ படம் பாதியில் நின்றதால் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசான் 24ம் புலிகேசி’ விவகாரம். இதன் பின்னனியை பார்த்தால் இந்த சர்ச்சைக்கு யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அப்போது வடிவேலு திமுக விற்காக பிரச்சாரம் செய்து ஜெயலலிதா பகையை சம்பாதித்திருந்த நேரம். பொது மேடைகளிலோ படங்களிலோ எதிலும் தலைகாட்டாமல்  அமைதியாக இருந்தார். அப்போது நனது நண்பர்கள் சிலரிடம் ஜெ தரப்பு என்ன மன நிலையில் இருக்கிறதென்று தெரிந்து கொள்ள தூது விட்டபடியிருந்தார். 

vadivelu

அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் கொடுத்த யோசனை வடிவேலுவை நிமிர்ந்து உட்கார வைத்தது.  “இம்சை அரசன் படத்தில் இருக்கும் கெட்டப்பில் இரட்டை விரலை காட்டியபடி போஸ் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கலாம்.” என்று கூற, பதிலுக்கு வடிவேலு “இது என்னவென்று யாராது கேட்டால் என்ன பதில் சொல்வது?” என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு நண்பர் “இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லிவிடலாம்“ என்று கூறியிருக்கிறார். 
அப்போது அந்த நண்பரே, “இதற்கு பேசாமல் சிம்புதேவனையே இரண்டாம் பாகம் கதையை தயார் செய்யச்சொல்லிவிட்டு அந்தப் படத்தில் நடித்தால் என்ன?” என்று கேட்க, இந்த யோசனை வடிவேலுவிற்கும்  பிடித்துபோனது.

vadivelu 1

அதன் பிறகு சிம்புதேவை அழைத்து கதை பண்ணச்சொல்லியிருக்கிறார் வடிவேலு. அவரும் கதையை தயார் செய்து வடிவேலுக்கு கதை சொல்லியிருக்கிரார். ஒரு சில இடங்களில் வடிவேலு சில மாற்றங்கள் செய்யச்சொல்ல, அதையும் மெருகேற்றி நல்ல காமெடிக்கதையாக தயார் செய்து விட்டார்கள். 

shankar

யார் தயாரிப்பு என்று கேட்கும்போது இயக்குனர் ஷங்கர் சாரே ‘எஸ்’ பிக்ஸர்ஸில்  தயாரிக்கட்டும் என்று  அவரிடமும் சம்மதம் வாங்கி விட்டார். ஆனால் வடிவேலு சம்பளத்தை உயர்த்தி சொல்லி எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த படமே அவரை ஆளும் தரப்பின் கோபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாக தொடங்கப்பட்டது. இதில் சம்பளத் தகறாரை ஷங்கர் எதிர்பார்க்கவில்லை. அப்படியும் எல்லோரும் சேர்ந்து ஒத்துக்கொள்ள, “இந்தப் படம் இப்போது வேண்டாம்.” என்று பின்வாங்கி விட்டார்.

thenaliraman

அப்போது ‘தெனாலிராமன்’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார். அப்போது அவரது நண்பர் “இம்சை அரசனுக்குப் பிறகு ராஜா கதையில் நடித்து அது இந்தப் படமகதான் இருக்க வேண்டும். காரணம் இதை விடக் காமெடி தெனாலிராமன் படத்தில் இல்லாவிட்டால் இந்தப் படம் போல் தெனாலிராமன் இல்லை என்று கூறி விடுவார்கள். பிறகு இம்சை அரசன் படமும் செய்ய முடியாமல் போய் விடும் என்று எடுத்துக் கூறியும் கேட்காமல், தெனாலிராமன் படத்தில் முழ்கிப்போனார். 

shankar

எதிர்பார்த்தது போலவே படம் ப்ளாப் ஆகிவிட்டது. இதனால் தயாரிப்பு தரப்புக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட, கடன் தீர்க்கும் பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்டார் வடிவேலு. பிறகு மிக நீண்ட மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் சிம்புதேவனை தொடர்பு கொண்டு படத்தை தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். உற்சாகமாக வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. சென்னை ஏ.வி.எம்மிலும், சென்ட்ரல் அருகில் உள்ள விக்டோரியா ஹாலிலும் பிரமாண்டமான செட் போடப்பட்டு படல் காட்சிகள் நடந்தப்பட்டன. 

இந்நிலையில் வடிவேலுவிடம் காஸ்ட்யூம் டிசனைராக இருக்கும் ஒருவர் “உங்கள் காஸ்டியூம்களை நானே டிசைன் செய்கிறேன். இதை கம்பெனியில் சொல்லி அனுமதி வாங்கிக்கொடுங்கள் வரும் பணத்தில் நீங்கள் பார்த்து ஏதாவது கொடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். காஸ்ட்யூம் என்றால் மிகப்பிரமாண்டமாக இருக்குமே அதிலேயே அவருக்கு பெரும் தொகை கிடைக்கும் என்பதால் காஸ்ட்யூம் டிசைனர் சொன்ன படி தயாரிப்பு தரப்பிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் கம்பெனியில், “இது கதைக்கான ட்ரெஸ் டிசைன் இதை நாங்கள்தான் செய்ய முடியும் வேண்டுமானால் உங்கள் காஸ்ட்யூம் டிசைனருக்கு நாங்கள் பணம் தந்து விடுகிறோம்.” என்று கூரியிருக்கிறார்கள். 

thenaliraman 1

அதற்கு ஸ்பாட்டில் ஒத்துக்கொண்டு போன வடிவேலு மறுநாள் அந்த காஸ்ட்யூம் டிசைனரின் பரிதாபத்தால் மனம் மாறி மீண்டும் முரண்டு பிடித்திருக்கிறார். ஆனால் தயாரிப்பு தரப்பு ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியே போன படப்பிடிப்பில் அரை மனதோடு நடித்துக்கொடுத்திருக்கிறார்.  பிறகு மெதுவாக தனது சம்பளம் பத்தாது என்று மூன்று நாட்கள் படப்பிடிப்புக்கே வராமல் முடங்கிப்போனார். விக்டோரியா ஹாலில் போடப்பட்ட செட்டுக்கு பல லட்சம் வாடகை கொடுக்கும்படி நேர்ந்தது.  

வடிவேலுவிடம் பேசி அவருக்கு கேட்ட சம்பளத்தில் பாதியை கொடுப்பதாக ஒத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தியிருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு மதியம் 12 மணிக்கு வருவதும் மாலை 6 மணிக்கு சென்று விடுவதுமாக மறைமுகமான ஒத்துழையாமையைக் கொடுத்து வந்தார். மீண்டும் சில நாட்கள் வராமல் ஆப்சென்ட் ஆக, தயாரிப்பு தரப்பு கைகளை பிசைந்தபடி நின்றிருக்கிறது. இது குறித்து காரணம் கேட்டபோது, “பாடல் வரிகள் சரியில்லை அதை மாற்ற வேண்டும்“ என்று கூறி எல்லோரையும் மயக்கம் போட வைத்திருக்கிறார் வடிவேலு. 

vadivelu 3

இது நடந்த போது செட் வாடகை கோடியை தொட்டிருந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஷங்கர் வடிவேலு மீது புகார் கொடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் காத்திருந்தார். ஷங்கர் வந்திருக்கிறார் என்ற தகவல் தெரிந்து, நிர்வாகிகள் வேகமாக அலுவலகம் வந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் விஷயத்தின் விபரீதம் புரிந்து வடிவேலு மீது ரெட் கார்டு போட முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

vadivelu 4

மக்களின் மனம் கவர்ந்த ஒரு மாபெரும் கலைஞன் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளாமல் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனதன் விளைவுதான் படங்கள் இல்லாமல் விட்டிற்குள் முடங்கிப்போனதன் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.