தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

 

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலைவரை அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் தூத்துக்குடியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை பதிவு இதுவாகும். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விட்டுள்ளது.