“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தமிழகத்தில் வரும் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்ட நிலையில் மேலும் தாமதமாகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 2 இல் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்திற்கு ரெட் அலர்ட்” : மீண்டும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை !

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் உருவானது என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு அது புயலாக மாறினால் ‘ புரெவி ‘ என பெயர் வைக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.