தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

 

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

தமிழகத்தில் நிவர் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 300 கி.மீ தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதி தீவிர புயலாக மாறி 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் நள்ளிரவு கரையை கடக்கவிருக்கிறது.

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

இந்த புயலால் தற்போது சென்னை மெரினா கடற்கரை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்திருப்பதோடு, சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!

இந்த நிலையில், புயல் இன்னும் 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளான ஈசிஆர், ஓஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.