‘அதீத மழைக்கு வாய்ப்பு’..நீலகிரியை தொடர்ந்து தேனி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

 

‘அதீத மழைக்கு வாய்ப்பு’..நீலகிரியை தொடர்ந்து தேனி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் தென்மேற்கு பருவமழையாலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் 54 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதனால் நேற்று மாலை 4 மணியளவில் பேரிடர் மீட்புக் குழு அவலாஞ்சிக்கு விரைந்தது. இதனிடையே நீலகிரியில் அதீத மழை பெய்யும் என்பதால் அம்மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். நீலகிரியை தொடர்ந்து தேனி மற்றும் கோவையிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது.

‘அதீத மழைக்கு வாய்ப்பு’..நீலகிரியை தொடர்ந்து தேனி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

இந்த நிலையில் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் தென்காசியில் மிக கனமழை பெய்யும் என்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4.2 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்றும் தெரிவித்துள்ளது.