“அதிகனமழைக்கு வாய்ப்பு” நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்!

 

“அதிகனமழைக்கு வாய்ப்பு” நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடருகிறது. குறிப்பாக நீலகிரியில் கடந்த 3 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் படி, மக்களை மீட்டு தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினரை வரவழைத்துள்ளதாகவும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். நீலகிரியை தொடர்ந்து கோவையிலும் விட்டு விட்டு மழையும், சூரைக்காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது.

“அதிகனமழைக்கு வாய்ப்பு” நீலகிரி மாவட்டத்துக்கு தொடரும் ரெட் அலெர்ட்!

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் தொடருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்றும் கோவை மற்றும் தேனி மாவட்டங்களின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் திண்டுக்கல், விருதுநகர், குமரி, தென்காசி, நெல்லை, திருப்பூர், தூத்துக்குடியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரமாக இருப்பதால் அதீத்மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.