மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து முடிந்த 6ம் கட்ட தேர்தல்… 79 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது

மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து முடிந்த 6ம் கட்ட தேர்தல்… 79 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது

மேற்கு வங்கத்தில் நேற்று 6ம் கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 79 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இது வரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் 6வது கட்டமாக 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.

மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து முடிந்த 6ம் கட்ட தேர்தல்… 79 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது
வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்

நேற்று காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர். தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது. 6ம் கட்ட தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 79.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மேற்கு வங்கத்தில் அமைதியாக நடந்து முடிந்த 6ம் கட்ட தேர்தல்… 79 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது
வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்

நாடியா மாவட்டம் டெஹட்டா சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமாக 84.84 சதவீத வாக்குகள் பதிவானது. வரும் 26ம் தேதியன்று 7ம் கட்டமாக 36 தொகுதிகளுக்கும், வரும் 29ம் தேதியன்று 8ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ம் தேதியன்று தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.