மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் – துணை வேந்தர்

மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் – துணை வேந்தர்

மாணவர்கள் போராட்டம் அரசின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நினைவு சின்னம் அமைக்கப்படுகிறது.

மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் – துணை வேந்தர்

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை நினைவாக 2019ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலை. அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூணை இலங்கை அரசின் உத்தரவின் படி கடந்த சில தினங்களுக்கு முன், இரவோடு இரவாக இடித்து தள்ளப்பட்டது.

மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் – துணை வேந்தர்

இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

மீண்டும் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் – துணை வேந்தர்

இந்நிலையில் யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதுகுறித்து தெரிவித்துள்ள துணைவேந்தர் சற்குணராஜன், மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். துணைவேந்தர் சற்குணராஜன் கோரிக்கையை ஏற்று மாணவர்களும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.