9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை : யார் யார் தெரியுமா?

9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை : யார் யார்  தெரியுமா?

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011 ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாக இருந்தவர்கள்
சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ் மற்றும் லதா. இந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது பதவிக் காலத்தின்போது கேள்வித்தாள் வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் தேர்வர்கள் மீதான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை : யார் யார்  தெரியுமா?

இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இவர்களது பதவி காலத்தில் எந்த வெளிப்படைத்தன்மையும் கடை பிடிக்கவில்லை என மாநில தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பு வகித்த இந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளையும் கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை : யார் யார்  தெரியுமா?

ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் தலைமை செயலாளர் செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் கடிதம் மூலம் இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.