பக்கவாதம் – அறிகுறிகள் அறிவோம்!

 

பக்கவாதம் – அறிகுறிகள் அறிவோம்!

இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை மாரடைப்பு என்பது போல, மூளையில் ஏற்படும் அடைப்பை பக்கவாதம் என்கிறோம். வளர்ந்த நாடுகளில் பக்கவாத பாதிப்புகள் குறைந்துகொண்டே வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பக்கவாதத்தால் அவதியுறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பக்கவாதம் – அறிகுறிகள் அறிவோம்!

1996ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் 12வது இடத்தில் இருந்த பக்கவாதம் 2016ம் ஆண்டில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைகிறோம். ஆனால், பக்கவாதம் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது இல்லை. இதன் விளைவு ஒரு பக்கம் கை, கால் செயலிழந்து, பேச்சிழந்து லட்சக் கணக்கானோர் வாழ வழியின்றி அவதியுற்று வருகின்றனர்.

இரண்டு காரணங்களால் பக்கவாதம் ஏற்படலாம். முதலாவது காரணம் ரத்தக் குழாய் அடைப்பு. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மூளை செல்கள் (நியூரான்ஸ்) உயிரிழக்கின்றன.

பக்கவாதம் – அறிகுறிகள் அறிவோம்!

இரண்டாவது ரத்தக் குழாய் வெடிப்பு. ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக ரத்தம் மூளையில் வெளியேறுகிறது. இதனால், மூளை செல்களுக்கு ரத்தம் கிடைக்காமல் பக்கவாதம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

ஆண்கள், பெண்களுக்குத் தென்படும் பொதுவான அறிகுறிகள்:

திடீரென்று முகம் மற்றும் கை, கால், குறிப்பாக ஒரு கை ஒரு காலில் வலுவின்மை, உணர்வின்மை ஏற்படும்.

பேச்சில் குழறல் இருக்கும். பேச முடியாமை. வார்த்தைகள் வராமையால் மற்றவர்களுக்குப் புரியாத தன்மை.

ஒரு கண் அல்லது இரண்டு கண்களும் திடீரென்று மங்கத் தெரியும்.

நடக்க முடியாத நிலை ஏற்படும். நேராக நிற்கக் கூட முடியாது.

தாங்க முடியாத தலைவலி ஏற்படும்.

பெண்களுக்கு தென்படும் கூடுதல் அறிகுறிகள்:

மூச்சுத் திணறல்

சோர்வு

குழப்பமான உணர்வு

திடீர் நடத்தை மாற்றம்

அவர்கள் கண்ணுக்கு மட்டும் சிலர் தெரிவது போன்ற, குரல் கேட்பது போன்ற உணர்வு

வாந்தி அல்லது குமட்டல்

தொடர் கொட்டாவி

பக்கவாதம் – அறிகுறிகள் அறிவோம்!

ஃபாஸ்டாக (FAST) செய்ய வேண்டியது:

F – முகம் (face) முகம் கோணுதல் போன்ற மாறுபாடு தெரிந்தவுடன் அலர்ட் ஆகிவிட வேண்டும்.

A – கை (arms)கையில் உணர்வு இன்மை ஏற்பட்டால் அது அது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

S – பேச்சு (speech) பாதிக்கப்பட்டவரைப் பேசச் சொல்ல வேண்டும். அவருக்கு வாய் குழறுதல் போன்றவை இருந்தால் அது பக்கவாதம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

T – நேரம் (time)மேலே சொன்ன மூன்று அறிகுறிகளில் ஒன்று இரண்டு தென்பட்டாலும் கூட உடனடியாக பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.