அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு: உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

 

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு:  உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார்.

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு:  உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோரும் சிகிச்சை பற்றி கேட்டு அறிந்தனர். தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சேலம் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு:  உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.