திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

 

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணியில், மாலை 6 மணி அளவில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி – தெய்வயானை தாயாருடன் சிறப்பு தங்க கவசங்களுடன் எழுந்தருளி, கோயில் மாட உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

அதனை தொடர்ந்து, மலைக்கோயில் மாடத்தில் உள்ள சொக்கப்பனையில் திருக்கோயில் தலைமை குருக்கள் அகண்ட தீபம் ஏற்றினார். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய் கொண்டு, மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி, மலைக்கோயிலுக்கு காவடி எடுத்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு


இதே போல், சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் மலை மீது அமைந்துள்ள 12 அடி உயரமுள்ள தூணின் மீது அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோசங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.