கொரோனா குறைவது எப்போது? ஆய்வில் வெளியான உண்மை!

 

கொரோனா குறைவது எப்போது?  ஆய்வில் வெளியான உண்மை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 776 பேர் தொட்டால் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா குறைவது எப்போது?  ஆய்வில் வெளியான உண்மை!

ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கொரனோ நோயாளிகள் எண்ணிக்கை மே மாதம் 11 முதல் 15 க்குள் 33 லட்சம் முதல் 35 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மே மத்தியில் உச்சத்தை தொட்டு பலரும் வியக்கும் வண்ணம் மே இறுதியில் வெகுவாக குறையும் எனவும் கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணீந்தர் அகர்வால் கூறியுள்ளார்.ஏப்ரல் மத்தியில்கொரோனா உச்சத்தை தொட்டு பின்னர் குறையும் என கணிதவியல் கோட்பாடுகளின்படி கணிக்கப்பட்ட நிலையில் , அது பொய்யானது. இதனால் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கணிதவியல் கோட்பாடுகளில் சில குறைபாடுகளை களைந்து புதிய முறையில் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா குறைவது எப்போது?  ஆய்வில் வெளியான உண்மை!

பழைய நடைமுறை கணிதவியல் கோட்பாடுகளில் உள்ள குறைபாடுகளால் ஏப்ரல் இறுதியில் கொரோனா குறையும் என்பது பொய்த்துப் போய் இன்னும் தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.