பச்சைக்கொடி காட்டிய விஜய் -சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்

 

பச்சைக்கொடி காட்டிய விஜய் -சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்

நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் விஜய்.

பச்சைக்கொடி காட்டிய விஜய் -சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதியில் தேர்தலும் , தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு வரும் ஒன்பதாம் தேதியும் தேர்தல் நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களம் இறங்கி இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் இதில் களம் இறங்க தயாராகி விட்டனர். முன்னதாக நடந்த ஊராட்சி மன்றத் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அதனால் இந்த முறையும் கண்டதை போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்று என்ற ஒரு கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த தலைமை அதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

பச்சைக்கொடி காட்டிய விஜய் -சுயேட்சையாக களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்

இது தொடர்பாக அவர்கள் விஜயின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தலைவர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் 9 மாவட்ட நிர்வாகிகளை தனியே கலந்து பேசி இருக்கிறார். அந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளும் சுயேச்சையாக போட்டியிட்டு கொள்ளலாம் என்று விஜய் சொன்னதை வைத்து புஸ்லி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து 9 மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட தயாராகி வருகின்றனர் என்று தகவல்.