ஈரோடு- ஆர்கே.வி ரோட்டில் இன்று காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

 

ஈரோடு-  ஆர்கே.வி ரோட்டில் இன்று காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஈரோடு செப் 3-
ஈரோடு மாவட்ட த்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஈரோடு ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கிவந்தது பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கியதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ உ சி பூங்கா பகுதியில் மாற்றப்பட்டு இயங்கிவருகிறது இந்நிலையில் மீண்டும் பழைய இடத்திலேயே மார்க்கெட் செயல்பட வேண்டும்

ஈரோடு-  ஆர்கே.வி ரோட்டில் இன்று காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் பழைய மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் அங்கு ஏற்கனவே இருந்த காய்கறி கடைகளில் 40 சதவீத கடைகள் இடித்து அகற்றப்பட்டன இதை கண்டித்து இன்று ஆர் கே வி ரோட்டில் உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டனர் பின்னர் அவர்கள் திடீரென ஆர்கேவி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மாநகராட்சி உதவி ஆணையாளர் விஜயகுமார் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது வியாபாரிகள் கூறும்போது, நாங்கள் பழைய மார்க்கெட் பகுதியில் 44 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம் இந்நிலையில் வைரஸ் காரணமாக மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது பின்னர் வஉசி பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது வ உ சி பூங்கா பகுதியில் மழை காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் வியாபாரம் செய்ய சிரமமாக உள்ளது மேலும் வியாபாரிகளுக்கு கழிப்பறை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை முக்கியமாகபுது இடத்தில் வியாபாரம்செய்வதால் காய்கறிகள் சரியாக விற்கவில்லை இதனால் எங்கள் வாழ்வாதாரம்

ஈரோடு-  ஆர்கே.வி ரோட்டில் இன்று காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பாதித்துள்ளது மேலும் பழைய மார்க்கெட் பகுதியில் எங்கள் அனுமதி இல்லாமல் கடைகள் இடிக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது செயலாகும் மேலும் தமிழகத்தில் பிற இடங்களில் காய்கற மார்க்கெட் மீண்டும் பழைய இடத்தில் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் ஈரோட்டில் பழைய இடத்தில் வணிக வளாகம் கட்டுவதாக கூறுகிறார்கள் அவ்வாறு கட்டும் போது இங்குள்ள வியாபாரிகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுக்கு பழைய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிகாரியிடம் கூறினர் அப்போது பேசிய அதிகாரிகள் இது குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் பேச்சுவார்த்தை மூலம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார் இதை ஏற்று வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் போக்குவரத்து சீரானது பின்னர் வியாபாரிகள் மாநகராட்சிக்கு கமிஷனரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பேச்சுவார்த்தை அறைக்குள் சென்றனர் அங்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கேஎஸ் தென்னரசு எம்எல்ஏ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது செய்தி;அமுதினி