ஆவடி அருகே பேருந்தை எரித்த விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் இருவர் கைது

 

ஆவடி அருகே பேருந்தை எரித்த விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் இருவர் கைது

ஆவடி அருகே பேருந்தை எரித்த விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே கடந்த 14 ஆம் தேதி பாமக இளைஞரணி தலைவர் கார்த்தில் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பேருந்தை தீ வைத்து எரித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆவடி அருகே பேருந்தை எரித்த விவகாரத்தில் பாமக உறுப்பினர்கள் இருவர் கைது

இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்ட நிலையில் பேருந்து உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் செல்வகுமார், கீர்த்திராஜன் ஆகிய பாமக உறுப்பினர்கள் 2 பேரை பட்டாபிராம் காவல்துறையினர் கைது செய்தனர்.