தமிழக சட்டமன்றத் தேர்தல் சவாலாக இருந்தது – தேர்தல் அதிகாரி

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் சவாலாக இருந்தது – தேர்தல் அதிகாரி

கொரோனா காலகட்டத்தில் பெரும் இக்கட்டான சூழலில் கடந்த ௬ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கூடுதல் வாக்குச்சாவடிகள், கூடுதல் பாதுகாப்பு என தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் சவாலாக இருந்தது – தேர்தல் அதிகாரி

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூட தெரிவித்திருந்தது. முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை, வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு என பல்வேறு கட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. நேற்றே அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்து விட்டது. 179 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியை பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு சில தொகுதிகளில் முடிவுகளை அறிவிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் சவாலாக இருந்தது – தேர்தல் அதிகாரி

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் மிக சவாலாக இருந்தது. முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்படும். அதன் பிறகு ஆளுநரிடம் முடிவுகள் ஒப்படைக்கப்படும் என்று கூறினார். மேலும், மறு வாக்கு எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை விடுக்காததால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு அவசியம் இல்லை என்றும் இன்று மாலைக்குள் தேர்தல் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.