தமிழகத்தில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு

 

தமிழகத்தில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.34 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.44 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,669பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 976 பேர் ஆண்கள், 693பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 30ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 843ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 298 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் திடீரென குறைந்த கொரோனா பாதிப்பு

இன்று 17 பேர் உயிரிழந்துள்ளார். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 288ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,565 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 899ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.