நாகூர் தர்கா குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது : தனுஷ்கோடியில் தேவாலய கட்டிடத்தின் சுவர் தரைமட்டமானது!

நாகூர் தர்கா குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது : தனுஷ்கோடியில் தேவாலய கட்டிடத்தின் சுவர் தரைமட்டமானது!

தனுஷ்கோடியில் பலத்த காற்று வீசியதால் பாழடைந்த தேவாலய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

நாகூர் தர்கா குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது : தனுஷ்கோடியில் தேவாலய கட்டிடத்தின் சுவர் தரைமட்டமானது!

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. கடலூர் மாவட்டமே ஒரு புறம் கடலாக மாறியுள்ள நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

நாகூர் தர்கா குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது : தனுஷ்கோடியில் தேவாலய கட்டிடத்தின் சுவர் தரைமட்டமானது!

இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் பலத்த காற்று வீசியதால் பாழடைந்த தேவாலய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக தோப்புத்துறையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த வடமலை காட்டீஸ்வரர் கோவில் இடிந்தது. காட்டீஸ்வரர் கோவிலில் அம்மன் சந்நிதியில் உள்ள கோபுர பகுதி முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. அதேபோல் நாகூர் தர்கா குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது.