தனியே இருந்த டீச்சரும் , மகனும் – உள்ளே வந்த மர்ம நபர்கள்- அடுத்து காத்திருந்த அதிர்ச்சி

 

தனியே இருந்த டீச்சரும் , மகனும் – உள்ளே வந்த மர்ம நபர்கள்- அடுத்து  காத்திருந்த அதிர்ச்சி

ஒரு டீச்சரும் அவரின் மகனும் கொலை செய்யப்பட்டு கிடந்தது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது
கொல்கத்தாவின் பெஹலா பர்னாஸ்ரீ பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் 35 வயதான பெண் தன்னுடைய கணவர் மற்றும் 14 வயது மகனோடு வசித்து வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் திங்கள்கிழமை அவர்களின் வீட்டில் அந்த டீச்சரும் அவரின் மகனும் தனியாக இருந்தனர் .அப்போது அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார் .அப்போது அந்த டீச்சர் தனியாக இருப்பதை அந்த பகுதியில் ஒளிந்திருந்த சில மர்ம மனிதர்கள் நோட்டமிட்டு வந்தனர் .பின்னர் அவரின் வீட்டினுள் வந்த அவர்கள் அந்த டீச்சரையும் அவரின் மகனையும் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் .

தனியே இருந்த டீச்சரும் , மகனும் – உள்ளே வந்த மர்ம நபர்கள்- அடுத்து  காத்திருந்த அதிர்ச்சி


பின்னர் அன்று மாலையில் வீட்டிற்குள் வந்த அவரின் கணவர் வீட்டின் கதவு மூடியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .பிறகு அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ,அவரின் டீச்செர் மனைவியும் அவரின் பள்ளி சீருடையில் இருந்த மகனும் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த வண்ணமிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு அவர்களின் அருகில் சென்று பார்த்த போது இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அழுது புரண்டார் .பிறகு அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் .அதன் முடிவு வந்த பிறகுதான் இந்த கொலைக்கான காரணம் தெரியுமென்று போலீசார் கூறினர்