பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் 150 ஆண்டுகள் பழமையான நகர மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கணிதத்துறையில் சேகர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நகர பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவிகள் தங்களிடம் சேகர் என்ற கணித ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக பள்ளி செயலாளர் வேலப்பனிடம் புகார் அளித்தனர் . அந்த புகார் அடிப்படையில் பள்ளி செயலாளர் வேலப்பன் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆசிரியர் சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தெரிவித்தார். இந்த புகார் அடிப்படையில் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.