வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க! – ஜே.பி.நட்டா பேச்சு

வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க! – ஜே.பி.நட்டா பேச்சு

தி.மு.க வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்று கானொலி காட்சி மூலம் நடந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க! – ஜே.பி.நட்டா பேச்சு

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கானொலி காட்சி மூலம் நடந்தது. இதில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது. “தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து உணர்வுகளை தி.மு.க தூண்டிவிட்டு வருகிறது. தேசிய நீரோட்டத்தில் ஒன்று சேர்வதை அவர்கள் தொடர்ந்து சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வளர்ச்சிக்கு எதிரான கட்சி தி.மு.க! – ஜே.பி.நட்டா பேச்சு

வளர்ச்சிக்கு எதிரான இயக்கம் தி.மு.க. நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாக தி.மு.க உள்ளது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களுக்கு பொருத்தமான பதிலடியை நாம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.