“யாரும் செய்யாததையா கே.டி ராகவன் செய்துவிட்டார்” – சீமான் ஆதரவு!

 

“யாரும் செய்யாததையா கே.டி ராகவன்  செய்துவிட்டார்” – சீமான் ஆதரவு!

கே.டி. ராகவன் வீடியோவை வெளியிட்டவரை முதலில் கைது செய்ய வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

“யாரும் செய்யாததையா கே.டி ராகவன்  செய்துவிட்டார்” – சீமான் ஆதரவு!

தமிழக பாஜக பெண் நிர்வாகிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக புகார் எழுந்த நிலையில் சமீபத்தில் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் வீடியோ ஒன்று வெளியானது. பாஜகவில் கடந்த ஆண்டு இணைந்த பத்திரிகையாளர் மதன் என்பவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புதல் அளித்ததால் தான் வீடியோ வெளியிட்டதாக மதன் சில ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இது ஒருபுறமிருக்க பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்கள் சமீபத்தில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் இந்த செயலில் ஈடுபட்ட ராகவனை கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கும் அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“யாரும் செய்யாததையா கே.டி ராகவன்  செய்துவிட்டார்” – சீமான் ஆதரவு!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, “கே.டி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. அதை கேமரா வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார். அதை காட்சிப்படுத்துவது தான் சமூக குற்றம். முதலில் வெளியிட்ட நபரை தான் கைது செய்ய வேண்டும்” என்று ஆதரவாக பேசியுள்ளார்.தொடர்ந்து பேசியுள்ள அவர், நாங்கள் ஒட்டும் சுவரொட்டிகள் தான் சிங்காரச் சென்னை கெட்டுப் போகிறதா?பாலிதீனை தடை செய்யாமல் திமுக அரசு எப்படி எழில் சென்னையாக மாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.