பள்ளிகள் திறப்பு- தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு

 

பள்ளிகள் திறப்பு- தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு- தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு

இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றை ஆகஸ்ட் 27 க்குள் சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் நடத்திய அலகு தேர்வின் விடைத்தாள்களை திருத்தி பள்ளி திறந்ததும் மாணவர்களிடம் தரவேண்டும். பள்ளியை சுத்தம் செய்யும் பணியை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க வகுப்புகளை நடத்தவேண்டும்.

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியில், தலைமை பண்புடன் செயல்படவும் பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் சார்ந்து முன்னரே திட்டமிட்டு செயல்படவும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் மிகவும் முக்கியம் என கருதி, பள்ளி திறக்கும் நாள் முன்னரே பள்ளிகளின் சுற்றுபுறங்கள், மைதானங்கள், வகுப்பறைகள் பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகள் நன்முறையில் சுத்தம் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

பள்ளிகளின் சுவர்கள் சுத்தம் செய்யப்படுவதோடு வண்ணம் பூசுதல், மராமத்து பணிகள் போன்றவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறக்கும் நாளான செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் நலன் கருதி, சானிடைசர், ஸ்கேனர் மற்றும் முகக்கவசம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.