மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் அறிவிப்பு!

மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் அறிவிப்பு!

மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் அறிவிப்பு!

கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுவாகவே மீனவர்கள் வாழ்க்கை சவால் நிறைந்ததாக உள்ளது. இந்த கொரோனா பேரிடரும் மீனவ சமூகத்தினரின் வாழ்வை புரட்டி போட்டுள்ளது.

மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் அறிவிப்பு!

இந்நிலையில் மீனவர்களுக்கான சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வெளி மாநிலம் சென்று மூன்று ஆண்டுகளுக்குள் சொந்த ஊர் திரும்பும் மீனவர்களுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மூன்று ஆண்டுகளுக்குள் சொந்த ஊர் திரும்பினால் ஆட்சியரின் மெய்த்தன்மை சான்று இன்றி திட்டத்தில் மீனவர்கள் சேரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.