வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தில் சசிகலாவுக்காக கட்டப்படும் பிரம்மாண்ட வீடு!

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தில் சசிகலாவுக்காக கட்டப்படும் பிரம்மாண்ட வீடு!

வருமான வரித்துறையினரால் நேற்று முடக்கப்பட்ட இடத்தில் சசிகலாவுக்காக பிரம்மாண்ட வீடு கட்டப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. சென்னை போயஸ்கார்டன், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்திருந்தனர். ஏற்கனவே ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்ட நிலையில் தற்போதும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தின.

வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்ட இடத்தில் சசிகலாவுக்காக கட்டப்படும் பிரம்மாண்ட வீடு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, வெளியே வரும்போது சசிகலா வசிக்க வேதா நிலையம் போன்று பிரமாண்ட வீடு கட்டும் பணி போயஸ் கார்டன் வேதா நிலையத்திற்கு அருகே கட்டப்பட்டுவருவதாகவும், அந்த இடத்திற்கும் வருமான வரித்துறையினர் சீல் வைக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.