கர்ப்ப காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

 

கர்ப்ப காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

மந்திரங்கள், மென்மையான இசை கருவில் உள்ள குழந்தையைச் சென்று சேரும் என்று நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் கூறுகின்றன. கர்ப்ப காலத்தில் நல்ல இசை, மந்திரங்களை சொல்லி வருவது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் மந்திரங்கள், ஸ்லோகங்கள் படிப்பதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு மன அமைதி கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

கர்ப்ப காலத்தில் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸுவஹ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்”

விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், சொர்க்கம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

குழந்தை எந்த ஒரு குறையும் இன்றி சுகப் பிரசவமாக பிறக்கக் கர்ப்ப ரக்‌ஷா மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

ஓம் பரப்ரம்ம பரமாத்மனே

மம கர்ப்ப தீர்க்க ஜீவி சுதே குரு குரு ஸ்வாஹா

கர்ப்பம் தரித்ததிலிருந்து வரும் முதல் பௌர்ணமியில் இருந்து இந்த மந்திரத்தைச் சொல்லி வர வேண்டும். முதன் முறை சொல்லும் போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் போட்டு, அதில் இடுப்பில் கட்டும் அளவுக்கு ஒரு உறுதியான பருத்தி நூலைப் போட வேண்டும். பிறகு மேற்கு பக்கமாக பார்த்து அமர்ந்தபடி 1008 முறை இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும். முடிவில் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். இது கர்ப்பத்தை பாதுகாக்கும். அதன் பிறகு தினமும் மூன்று முறை இந்த மந்திரத்தை சொன்னால் போதும்.