முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் : தொடரும் சிக்குப்பிடி விசாரணை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் : தொடரும் சிக்குப்பிடி விசாரணை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் : தொடரும் சிக்குப்பிடி விசாரணை!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதாவது மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், அவரால் மூன்று முறை கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.பிறகு சாந்தினியின் புகாரை தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை பெங்களூரில் வைத்து சமீபத்தில் கைது செய்தனர். இதனிடையே அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்ற போலீசார் : தொடரும் சிக்குப்பிடி விசாரணை!

மீண்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் மணிகண்டனை காவல்துறை விசாரணையில் எடுக்க அனுமதி கோரி இருந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டா.ர் அதன் பேரில் மணிகண்டனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதன் காரணமாக மணிகண்டனை போலீசார் மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்கு பிறகு மணிகண்டன் மீண்டும் நீதிமன்றத்தில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.