போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் : செருப்பால் அடித்து உதைத்த பொதுமக்கள்!

போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் : செருப்பால் அடித்து உதைத்த பொதுமக்கள்!

மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் : செருப்பால் அடித்து உதைத்த பொதுமக்கள்!

கடந்த 6ஆம் தேதி வடபழனி பேருந்தில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த தலைமை காவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து அந்தப் பெண் காவலரை திட்ட கோபமடைந்த காவலர் அந்த பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த காவலரை பிடித்து தாக்கியுள்ளனர். பெண்கள் சிலர் காவலரை தங்கள் செருப்புகளால் சரமாரியாக அடித்தனர். இதையடுத்து தலைமை காவலர் வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

போதையில் பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ் : செருப்பால் அடித்து உதைத்த பொதுமக்கள்!

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் ராஜூ என்பதும், கேகே நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அவர் அங்கு பெண்களிடமும் பொதுமக்களிடமும் தேவையில்லாமல் தகராறு செய்து வந்ததால் அவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் ராஜூ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபழனி காவல் நிலைய போலீசாருக்கு சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தலைமை காவலர் ராஜூவை பொதுமக்கள் அடித்து உதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.