பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி

 

பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பேருந்துகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறைகள் அமலில் இருந்தன.

பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி

இந்நிலையில் தற்போது அரசு, தனியார் பேருந்துகளில் இனி 100% இருக்கைகளில் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பல மாதங்களாக கூட்டமில்லாமல் இல்லாமல் இருந்த பேருந்துகள் மீண்டும் கூட்ட நெரிசலுக்குள் மாவட்டத்திற்குள் பயணிக்க தயாராகி உள்ளன.