உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு

 

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும், ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சில கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழலில் தங்களுக்கு என தனியாக பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் தேர்தல் ஆணையாயத்திடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சிகளுக்கு பொது சின்னம் ஒதுக்கியுள்ளது. அதன்படி மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் பொது சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.