‘கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருட்கள்’ தேனியில் அமலாகும் அசத்தல் திட்டம்!

 

‘கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருட்கள்’ தேனியில் அமலாகும் அசத்தல் திட்டம்!

கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருட்களை பெற முடியும் என்பது போன்ற புதிய திட்டம் தேனி மாவட்டத்தில் அமலாக உள்ளது.

சமீப காலமாக ரேஷன் கடைகளில் அதிகளவில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, ரேஷன் அரிசிகளை விலைக்கு விற்பதாகவும் ரேஷன் பொருட்களை அதிக விலைக்கு வெளியே விற்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அதிரடி சோதனையில் ஈடுபடும் போலீசார் டன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கு ரேஷன் கடை ஊழியர்களும் உடந்தையாக இருப்பது பல இடங்களில் அம்பலமானது. இதனை தடுக்கவே ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் ரேஷன் கடைகளில் முறைகேடு தொடர்கிறது.

‘கைரேகை வைத்தால் தான் ரேஷன் பொருட்கள்’ தேனியில் அமலாகும் அசத்தல் திட்டம்!

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கைரேகை வைக்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலாக உள்ளது. அதன் மூலம், குடும்ப அட்டையில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் தான் பொருட்கள் வாங்க முடியுமாம். ஒருவர் அட்டையை மற்றொருவர் பயன்படுத்துதல் தடுக்கப்படுகிறதாம். வசதியாக இருப்பவர்கள் கைரேகை வைத்து பொருட்கள் வாங்க தயங்குவார்கள் என்பதால் அரசுக்கு ரேஷன் செலவு மிச்சமாகும் என கூறப்படுகிறது.

அதே போல தேவை இருப்பவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க இந்த புதிய நடைமுறை வழிவகுப்பதோடு, ஒரே நாளில் எல்லா பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியுமாம். மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பது தடுக்கப்படும் என்பதால் விரைவில் எல்லா மாவட்டத்திலும் இந்த திட்டம் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.