திருவாரூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் : முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

 

திருவாரூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் : முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் : முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு முதல் முறையாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார். இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின், கருணாநிதி அருங்காட்சியக கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

திருவாரூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் : முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி மதிப்பில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய் – சேய் சிறப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தார். 4 அறுவை சிகிச்சை மையம், 250 படுக்கை வசதிகளுடன் தாய் சேய் நல மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.12 கோடியில் மகப்பேறு குழந்தைகள் சிகிச்சைக்கான சிறப்பு தீவிர சிகிச்சை மையமாக புதிய கட்டடம் விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளைக்கு புறப்பட்டு செல்லும் முதல்வர் ஸ்டாலின் திருக்குவளையில், கருணாநிதி இல்லத்தில் உள்ள முத்துவேலர் நூலகம், அஞ்சுகத்தம்மாள் படிப்பகத்துக்கு சென்று அங்குள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சென்று அங்கிருந்து காரில் புதுச்சேரி வழியாக சென்னை திரும்புகிறார்.