பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

 

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாச படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இவரை பற்றி சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில், காசி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை காட்டி அவர்களது அம்மாக்களையும் அடிபணிய வைத்திருக்கிறார் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது குண்டர் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சில நாட்களுக்கு முன்னர் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், காசிக்கு அரசியல் பலம் அதிகமாக இருக்கிறது என்றும் இதற்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார். கடந்த ஒரு மாத காலமாக காசியின் இந்த மோசடி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காசியின் வலையில் விழுந்த பெண் மருத்துவர் இவர் அழைத்து வரும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததும், சிறுமிகளை கூட விட்டு வைக்காமல் காசி பழகி வந்ததும் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில் அவரது வழக்கை சிபிசிஐடி மாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி எஸ்பி பரிந்துரை செய்ததால், பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.