வீடியோ,ஆடியோ பற்றி பாஜக தலைமை வாய் திறக்க மறுக்கிறது ஏன்? எம்.பி.ஜோதிமணி விளாசல்!!

 

வீடியோ,ஆடியோ பற்றி பாஜக  தலைமை வாய் திறக்க மறுக்கிறது ஏன்?  எம்.பி.ஜோதிமணி விளாசல்!!

பாஜக தலைவர்களின் பாலியல் அத்துமீறல் குறித்து பாஜக தலைமை வாய் திறக்க மறுப்பது ஏன் என்று எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக கட்சியில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த பத்திரிக்கையாளர் மதன் தானாக முன்வந்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் ராகவன் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவது போன்று பதிவாகியிருந்தது. இதை தொடர்ந்து ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. மாறாக வீடியோ வெளியிட்ட மதன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் . ஆனால் இந்த வீடியோ பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் தான் வெளியிட்டேன் என்று கூறி மதன் சில ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

வீடியோ,ஆடியோ பற்றி பாஜக  தலைமை வாய் திறக்க மறுக்கிறது ஏன்?  எம்.பி.ஜோதிமணி விளாசல்!!

அதில் பாஜக தலைமையில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பெண்களிடம் அத்துமீறுவதை ஒப்புக் கொள்வது போன்று அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜக தலைமையை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மகளிர் காங்கிரசார் கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் அண்ணாமலை பதவி விலக வேண்டுமென ஜோதிமணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்

இந்நிலையில் நாடாளுமன்ற எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலில் பாஜக ராகவன்பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக வந்த வீடியோ.அடுத்து பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை பேசியதாக வந்துள்ள ஆடியோ. இரண்டுமே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.இதுதான் பாஜகவின் மனநிலை என்றால் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ஏன் இந்த வீடியோ,ஆடியோ பற்றி பாஜக தலைமை வாய் திறக்க மறுக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.