ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

 

ஐபிஎல்- மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 34-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

Image

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் மற்றும் டி காக் ஆகியோர் நல்ல துவக்கம் தந்தனர். நிதானமாக ஆடிய ரோஹித் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டி காக் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் பொல்லாடு தன் பங்குக்கு 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவரில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து. கொல்கத்தா அணி தரப்பில் இருந்து பிரதிஷ் கிருஷ்ணா மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

156 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு துவக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா. துவக்க ஆட்டக்காரர் கில் 13 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வெங்கடேஸ் ஐயர் 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து, பும்ரா வீச்சில் போல்டு ஆனார். இறுதியாக 15.1 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 159 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.