மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர்!

 

மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர்!

ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு நியமித்துள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்தார். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பது ஏற்பாடுகளும் செய்யப்படும் என் றும் அவர் கூறினார்.

மாணவர்களின் நலனுக்காக ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலர்!

12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் 7,400 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் 36,089 மாணவர்கள் முந்தைய தேர்வு மையங்களில் எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.