விபத்தில் சிக்கிய முதியவரை தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

விபத்தில் சிக்கிய முதியவரை தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டையும் திறந்துவைத்தார்.

விபத்தில் சிக்கிய முதியவரை தனது காரிலேயே ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

திண்டுக்கல்லில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை முடித்துவிட்டு அமைச்சர் மா.சுப்ரமணியன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்திலிருந்து தன் இல்லம் சென்றுகொண்டிருக்கும்போது சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் சாலையில் விபத்து ஏற்பட்டு ஒரு முதியவர் இருந்தபோது தன் வாகனத்தை நிறுத்தி அவரை தன் காரில் ஏற்றி சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்