“அழகான போட்டோவை ,நிர்வாண போட்டோவா மாத்தி..” – சைக்கோ வாலிபரிடம் சிக்கிய பெண்கள்

 

“அழகான போட்டோவை ,நிர்வாண போட்டோவா மாத்தி..” – சைக்கோ வாலிபரிடம் சிக்கிய பெண்கள்

ஒரு வாலிபர் சமூக ஊடகத்தில் தன்னை பெண்ணாக காமித்து பல பெண்களை ஏமாற்றி அவர்களின் படங்களை மார்பிங் செய்ததால் கைது செய்யப்பட்டார்


குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 35 வயதான பாரத் அஹிர் என்ற வாலிபர் பல்வேறு சமூக ஊடக தளங்களில் தன்னை ஒரு பெண்ணாக காட்டிக்கொண்டு பெண்களுக்கு வலை விரித்தார் . பிறகு தன்னுடைய போலி அடையாளத்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பல பெண்களை துன்புறுத்தும் நோக்கத்துடன் நட்பு கொண்டார்.
பின்னர் பல பெண்கள் அவரை உண்மையாக பெண் என்று நினைத்து அவரிடம் தங்களின் பல அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டனர் .அப்போதெல்லாம் அவர் அவர்களிடம் பெண் குரலில் பேசி ஏமாற்றி வந்துள்ளார் .பின்னர் அந்த பெண்களின் அழகான படங்களை எடுத்து அதை நிர்வாண படமாக மார்பிங் செய்தார் .அதன் பிறகு அந்த படங்களை அந்த பெண்களுக்கே அனுப்பியுள்ளார் .அந்த படங்களை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் .மேலும் அந்த படங்களை யாரிடமும் காமிக்கவோ ஷேர் செய்யவோ வேண்டாம் என்று அழுது கேட்பார்கள் .அப்போது அந்த வாலிபர் அவர்களின் அழுகையை ரசிப்பார் .பிறகு இதையறிந்த சில பெண்கள் அவர் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினர் .பிறகு போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

“அழகான போட்டோவை ,நிர்வாண போட்டோவா மாத்தி..” – சைக்கோ வாலிபரிடம் சிக்கிய பெண்கள்