சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரரின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பாக நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும் தீபாவின் முன் ஜாமீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சிபிசிஐடி-யை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மூவரின் முன் ஜாமீன் மனுக்களுக்கும் சிபிசிஐடி காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திருத்த மனுக்களை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.