வரும் 21ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளேன்: உதயநிதி ஸ்டாலின்

 

வரும் 21ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளேன்: உதயநிதி ஸ்டாலின்

ஒரு புறம் கொரோனா பரவல் இருந்தாலும் மறுபுறம் அரசியல் கட்டிகள் சட்டமன்றத் தேர்தல் பணிகளும் தொடங்கிவிட்டன. மேலும், வழக்கமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான விமர்சனங்களும் ஆரம்பித்து விட்டன.

வரும் 21ஆம் தேதி முதல் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளேன்: உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் இணைய வழியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “வரும் 21ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளேன். செப்டம்பர் 21 க்கு பிறகு 100 பேர் அளவில் மக்களைச் சந்திக்கலாம் என மத்திய அரசு தளர்வு கொடுத்துள்ள நிலையில் இந்த பணியை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.

முன்னதாக திமுகவை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்கவே அரசு இபாஸ் முறையை ரத்து செய்யாமல் இருக்கிறது என்றும் சட்டமன்ற தேர்தலை குறித்த காலத்தில் நடத்துவார்கள் என நம்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.