ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்ட குஷ்பு ட்விட்டர் கணக்கு!

 

ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்ட குஷ்பு ட்விட்டர் கணக்கு!

மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது.

ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்ட குஷ்பு ட்விட்டர் கணக்கு!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரை 1.3 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது. அவரது கணக்கில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றம் செய்யப்பட்டதோடு அதில் இருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவரது ஐடி Briann என மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து நடிகை குஷ்பு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். ஏற்கனவே பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஷ்பு அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் முடக்கப்பட்ட அவரது கணக்கை மீட்டுள்ளனர். தற்போது kushboosundar என்ற ஐடியில் அவரது கணக்கு இயங்குகிறது.