கோடநாடு கொலை விவகாரம் : ஆளுநருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு!

 

கோடநாடு கொலை விவகாரம் : ஆளுநருடன்  ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு!

ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.

கோடநாடு கொலை விவகாரம் : ஆளுநருடன்  ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு!

கோடநாடு விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து நேற்று அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அத்துடன் இந்த விவகாரம் குறித்து கலைவாணர் அரங்கில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.ஆனால் திட்டமிட்டு திமுக அரசு பொய் வழக்கு போட திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கோடநாடு கொலை விவகாரம் : ஆளுநருடன்  ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு!

இந்நிலையில் கோடநாடு கொலை விவகாரத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக இன்று புறக்கணிக்கிறது . அத்துடன் ஆளுநரை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முறையிட திட்டம் வகுத்துள்ளனர். இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சந்தித்து கோடநாடு விவகாரம் குறித்து மனு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.