ஓடும் ரயிலில் பெண்ணின் 11.5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!

ஓடும் ரயிலில் பெண்ணின் 11.5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!

ஓடும் ரயிலில் பெண்ணின் தங்க நகைகளை திருடிய இளைஞர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணின் 11.5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனது மூன்று குழந்தைகளுடன் உறவினரின் திருமணத்திற்காக கும்மிடிப்பூண்டி செல்ல முற்பட்டுள்ளார். இதற்காக அவர் திருவொற்றியூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.ரயிலில் ஏறிய விஜயலட்சுமியை நோட்டமிட்ட 2 இளைஞர்கள் ஓடும் ரயிலில் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 11.5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

ஓடும் ரயிலில் பெண்ணின் 11.5 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!

இதுகுறித்து விஜயலட்சுமி கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சிசிடிவி காட்சிகள் என்ற அடிப்படையில் திருவொற்றியூர் ராஜாஜி நகர் நேரு தெருவைச் சேர்ந்த தினேஷ் என்கின்ற மண்டை தினேஷ் மற்றும் கிளி என்கின்ற தினேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து நகையை பறிமுதல் செய்ததுடன், சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.