ஐபிஎல்- ராஜஸ்தானை தட்டித்தூக்கிய டெல்லி… சாம்சனின் போராட்டம் வீண்!!

 

ஐபிஎல்- ராஜஸ்தானை தட்டித்தூக்கிய டெல்லி… சாம்சனின் போராட்டம் வீண்!!

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.

ஐபிஎல்- ராஜஸ்தானை தட்டித்தூக்கிய டெல்லி… சாம்சனின் போராட்டம் வீண்!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியின் பிரித்திவி சா 10 ரன்களிலும், ஷிகர் தவான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு கேப்டன் பன்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அணியின் ஸ்கோர் 83 ஆக உயர்ந்தபோது பன்ட் 24 ரன்களில் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் ஹெட்மையர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பிரமாதமாக பந்துவீசிய முஸ்டாஃபிசூர் மற்றும் சக்காரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டனர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள். பேட்டிங் பவர் பிளேவான முதல் 6 ஓவரில் லிவிங்ஸ்டன்,ஜெய்ஸ்வால்,மில்லர் ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து அசத்தினர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள். கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் வரும் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தனி ஒரு ஆளாக போராடி 39 பந்துகளில் அரைசதம் கடந்த சாம்சன் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.