ஐபிஎல்- ஐதரபாத்தை எளிதில் வீழ்த்தி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்த டெல்லி!

 

ஐபிஎல்- ஐதரபாத்தை எளிதில் வீழ்த்தி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்த டெல்லி!

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ,கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் துபாயில் இன்று மோதின.

ஐபிஎல்- ஐதரபாத்தை எளிதில் வீழ்த்தி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு வந்த டெல்லி!

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்ரிக் நார்கியா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அனைத்து பந்துகளையும் 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி அசத்தினார், இதில் மூன்றாவது பந்திலேயே டேவிட் வார்னர் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான விருத்திமான் சஹாவை 18 ரன்களில் வெளியேறினார் ககிசோ ரபாடா.

அதன்பின் வந்த கேப்டன் வில்லியம்சன் ஆமை வேகத்தில் ஆடினார். இறுதியில் 26 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதிகட்டத்தில் அப்துல் சமாத் 28 ரன்களும்,ரசித் கான் 22 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும்,ஆன்ரிக் நார்கியா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

135 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி தரப்பில் ப்ரித்வி சா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் பிறகு ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர் .சிறப்பாக ஆடிய
ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17.5 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 139 எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும்,கேப்டன் ரிஷப் பன்ட் 35 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணி ஏறக்குறைய இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது என்றே கூறலாம்.