இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

 

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,256 ஆக குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு குறைந்து 26,115 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,3,35,04,534ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 252 பேர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் 309 , நேற்று 295 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,385 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

கடந்த 24 மணிநேரத்தில் 34,469 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,27,49,574 பேர் குணமாகியுள்ளனர். அத்துடன் 3,09,575 பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 96,46,778 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை 81,85,13,827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.